Wednesday, May 12, 2010

அங்காடித் தெருவும் அதீதத்தின் ருசியும்

நான் அங்காடித் தெரு பார்க்கவில்லை ஜெமோ வசனம்  என்ற அம்சம் ஈர்த்தாலும் படம் பெரிய tear jerker [கண்ணீர்க் காவியம்] என்றார்கள் கண்ணீர்க் காவியங்களின் காலம் முடிந்து விட்டதாக நினைத்திருந்தேன் சிவாஜி படங்கள் பலபடங்கள் கண்ணீர்க் காவியங்களே [பாபு என்று ஒரு படம் இருக்கிறது பாருங்கள் இல்லை இல்லை பார்க்காதீர்கள் ]கமலும் நிறைய கண்ணீர்க் காவியங்களை கொடுத்திருக்கிறார் மகாநதி போன்ற அர்த்தம் உள்ள கண்ணீரும் உண்டு உயர்ந்த உள்ளம் போன்ற  அழுவாச்சிப் படங்களும் உண்டு வாழ்வின் இருண்ட பக்கங்களைப் பேசும் கலைப் படைப்புகள் தேவையே ஆனால் அதுவே அதீதம் ஆகி விடக் கூடக் கூடாது எனத் தோன்றுகிறது அதீதத்தின் ருசி அசூயை

1 comment:

தென்றல்... தீ... said...

ஒரு படத்தை பார்ப்பதற்கு முன்பே அது எப்படி அதீதம் என்றும் அசூயை என்றும் முடிவு கட்ட மனம் வந்தது ?
இருளிலும் ஒளியை தேடும் மனங்கள் நிரம்பிய படமது. கதையின் களம் வேண்டுமானால் ஏழ்மையின் முகங்களை
காட்டி இருக்கலாம். ஆனால் அந்த மனங்கள் !!!!! பார்த்துவிட்டு ......முடிவு செய்யலாமே போகன்.. ( போகிப்பவனா போகன் ???)
சங்கர் சுலபமாய் இருக்கிறது ????

LinkWithin

Related Posts with Thumbnails