ராவண புராணத்தை முடித்துவிடலாம்.ராவணன் பல விசயங்களில் விற்பன்னன் ஆனால் பெண்கள் விசயத்தில் ரொம்ப வீக் என்று புராணங்கள் சொல்கின்றன.அவன் பல வரங்கள் பெற்றிருந்தாலும் குறைந்தது 18 சாபங்களாவது அவனது பத்து தலை மேல் இருந்தது பெரும்பாலும் பெண் சமாச்சாரங்களால் கொடுக்கப் பாட்ட சாபங்கள் ஒரு முனிவரின் கண் முன்னாலேயே அவர் மனைவிக்கு 'மவுத் கிஸ்' கொடுத்துப் பெற்றுக் கொண்டது ஒரு சாம்பிள். சூர்ப்பனகைக்காக பழி வாங்கத்தான் சீதையை தூக்கிப் போனான் என்பது அத்தனை நம்ப முடியவில்லை [ஒரு கொசுறு செய்தி சூர்ப்பனகையின் இன்னொரு பெயர் மீனாட்சி!]அவன் பெற்றுக் கொண்ட சாபங்களில் ஒன்று விருப்பமில்லாத பெண்ணைத் தொட்டால் தலை சிதறிப் போகும் என்பது அதனாலேயே அவன் சீதையிடம் பொறுமை காத்தான் என்பார்கள் [இன்னொன்று அவன் கண் முன்னாலேயே வானரங்களால் அவன் மனைவி துயில் உறியப் படுவாள் என்பது] அவனிடமிருந்து சீதையை மீட்டு ராமன் அயோத்திக்கு மீண்டபோது கூடவே ஒரு பெரும் ஊர்வலம் சென்றது அதில் அகத்தியரும் இருந்தார்
அகத்தியரின் தோற்றம் பற்றிய கதை கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி கதை அவர் நேரிடையாக ஒரு பெண் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை ஒரு குடத்திலிருந்து பிறந்தார் .ஆகவேதான் அவர் பெயர் கும்பமுனி என்பார்கள்.ஆனால் அவர் மட்டுமே கும்பத்தில் இருந்து பிறக்கவில்லை வசிட்டரும் அவ்விதமே பிறந்தார் .அவரையும் நாம் கும்பமுனி என்றே அழைக்கலாம் அந்த வகையில் உலக வரலாற்றிலேயே முதல் டெஸ்ட் ட்யூப் குழந்தை என்று அவரைக் கூறலாம். இதேபோல் ஐரோப்பாவில் பரசெல்சஸ்[Paracelsus] என்ற ரசவாதி [இவரும் ஒரு மர்ம யோகியே]17 ம் நூற்றாண்டில் ஒரு சோதனைக் குழாய்க் குழந்தையை உருவாக்கியதாகச் சொல்லப் படுகிறது. இது போல் வினோதமான கர்ப்பங்கள் பற்றிய குறிப்புகள் புராணங்களில் நிறைய காணப் படுகின்றன.கன்னிப் பிறப்பு ஹிந்து மதத்துக்கு புதிதான விசயமே அல்ல. அது தவிர ஒரேநாளில் கருவுற்று குழந்தை பிறந்ததும் சொல்லலப் படுகிறது ரிஷி கர்ப்பம் ராத் தங்காது என்பார்கள் .ஆனால் அதற்கு நேர் எதிராக லோபாமுத்திரை [அகத்தியர் பத்தினி ]அவர் மகனை ஏழு வருடங்கள் கருத்தாங்கி பெற்றார்!
அகத்தியரின் இன்னொரு பெயர் குறுமுனி என்பது.அவரது உயரக் குறைவு குறித்த பட்டம் இது.இதன் காரணமாவே அகத்தியரை சீனர் என்று சந்தேகப் படுவோர் உண்டு தென் கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் அகத்தியரை சீனராக கருதும் கதைகள் உலவுகின்றன
இது ஒன்றும் ஆச்சர்யமான செய்தி இல்லை. சித்தர்களில் பலர் தமிழர் இல்லை போகர் சீனர் என்பது தெரியும் போன்க் யாங் என்று சீனாவில் அவர் பெயரில் நூல்கள் உள்ளன புலிப்பாணி மங்கோலியர் புலஸ்தியர் சிங்களர் [ராவணனது தாத்தா பெயரும் புலஸ்தியர் என்பது குறிப்பிடத் தக்கது ]இத்தனை பெரும் ஏன் அவ்வளவு தொலைவில் இருந்து தமிழ் நாட்டுக்கு வரவேண்டும்?காரணம் இல்லாமல் இல்லை அதற்குமுன் சித்தர்களுக்கும் சீனத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி பார்த்துவிடுவோம்
No comments:
Post a Comment