பாடும்போது அசையாத கல்சிலை போன்ற உடல் மிகப் பெரிய குங்குமப் பொட்டு பாவமே இல்லாத முகம் ஆனால் இந்திய திரை உலகில் இவர் அளவு உணர்ச்சிமிக்க குரல் எவருக்கும் இருந்ததில்லை இவ்வளவுக்கும் சுத்தமான சுருதி இவர் குரலில் உள்ளதாக சொல்லமுடியாது உச்ச்ஸ்தயிகளில் நடுங்கவேறு செய்யும் சுசிலாவின் குரலைப் போல் ஆற்றொழுக்கான குரலும் கிடையாது அவ்வப்போது பிசிறு அடிக்கும் காற்று வரும் ஆனால் நம் உயிரோடு உயிராக இழைந்து நம் காதோடு காதாக கொஞ்சும் மயக்கும் கிறக்கும் குரல் நிலா காயுது பாட்டை சுசிலா குரலில் கற்பனை செய்து பார்த்து உள்ளம் நடுங்குகிறது சுசிலா ஒரு கிராமத்துப் பெண்ணுக்காக பாடினாலும் தனது சாஸ்திரிய சங்கீத நகாசுகளை விட்டுவிடமாட்டார் ஜானகி அப்படி அல்ல காதலும் தாபமும் பொங்கித் ததும்பும் நம் கனவுத் தமிழ்ப் பெண்ணின் குரல் கீழே உள்ள பாடல்களைக் கேட்டுப் பாருங்கள் குறிப்பாக 'நினைத்தால் இனிக்கும் 'கல்யாண ராமனில் வந்த அதிகம் பிரபலம் ஆகாத பாடல் கூடவே 'எண்ணத்தில் ஏதோ சில் என்றது' என்ற பாடலும் ...ஆம் ஜானகியின் குரலை நினைக்கையிலேயே ஏதோ சில் என்கிறது ...
No comments:
Post a Comment