Tuesday, May 11, 2010

இடும்பைக் கூர் என் வயிறே

  • கொஞ்ச காலமாக சாப்பாட்டுக்கு லேசாக தாமதம் ஆனால் கூட கை காலெல்லாம் நடுங்கி கண்களில் பூச்சி பறந்து விசை இழந்த பொம்மை போல் ஆகி மருத்துவரிடம் போனதில் அல்சர்  குறைந்த சர்க்கரை வியாதி என்றார்கள் ஆனால் இந்த மனிதர் பிரஹலாத் ஜானி 70 வருடங்களாக சாப்பிடாமல் நீர் அருந்தாமல் இருக்கிறார் மலமூத்திரம் போவதில்லை ஆனாலும் பார்ட்டி நன்றாகத்தான் இருக்கிறார் மூளை கூட பிசகி இருக்கவில்லை என்று இந்திய பாதுகாப்புத் துறை ஆய்வு செய்து சொல்கிறது அவரைக் கேட்டால் சிறுவயதில் 'அம்பாள்' கனவில் தோன்றி நாக்கில் எழுதிய பிறகு பசி தாகம் எல்லாம் போயே போச்சு என்கிறார்

                                                  நம் நாட்டில் இது ஒன்றும் புதிய செய்தி அல்ல நம்முடைய சித்தர்கள் எல்லாம் இப்படிதான் 'சோறு தண்ணி' இல்லாமல் சுற்றுவதாக சொல்கிறார்கள் இமய மலையில் உள்ள ஒரு மூலிகை சாப்பிட்டால் பசி எடுக்காது என்று ஒரு விழாவில் ரஜினிபாபா சொன்னதை கமல் பெரியார் கிண்டல் செய்தது நினைவு வருகிறது                                   ஆனால் பகுத்தறிவு பகலவன்கள் கவனிக்க suspended animation  என்று இந்த மாதிரி விசயங்களை ஆராய்ந்து ஒரு ரஷ்யர் எழுதிய நூல் பிரசித்தம் [அவர் ஆர் எஸ் எஸ் சார்ந்தவர் என்று சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன்]                                                      அவ்வையார்' ஒரு நாள் ஈரேன்றால் இராய் இருநாள் ஏலென்றால் ஏலாய் இடும்பைக் கூர் ஏன் வயிறே 'என்று பாடியதற்கு தீர்வு இவரிடம் இருக்க கூடும்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails