Wednesday, May 5, 2010
சித்தர் என்றொரு இனமுண்டு?
சமீபத்தில் ஜெயமோகன் தனது வலைத்தளத்தில் சித்தர் பரம்பரை என்று தனியாக எதுவும் இல்லை அது ஒரு வாய்மொழி வரலாறே என்றும் சைவத்தின் ஒரு கூறே அவர்கள் என்றும் எழுதியிருந்தார் அவர் சொன்னது எனக்குள் சில கேள்விகளை ஏற்படுத்தியது அவரை யாரும் வலிமையாக மறுத்து எழுதவில்லை அவரது கூற்றுப் படி சித்தர்களின் காலமும் பிந்தியதே அதிகபட்சம் பதினைந்தாம் நூற்றாண்டு அது திருமூலராக இருந்தாலும் சரிதான் மூவாயிரம் வருடம் மூலன் உடலில் இருந்து வருடத்துக்கு ஒன்றாய் ஒரு பாட்டு எழுதினேன் என்பதையெல்லாம் கவிச்சுதந்திரம் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும் அவர்களது மொழியும் பிற்கால தமிழில் தான் இருக்கிறது ஆகவே சித்தர்கள் பற்றி புழங்குகிற கதைகள் எல்லாம் மிகைப்படுத்தப் பட்ட நம் உள்மன விழைவுகளே என்பது அவர் நிலை இந்தக் கருத்துகளில் ஓரளவு உண்மை இருக்கிறது சதுரகிரியை விட டிவி தொடர்களில்தான் சித்தர்கள் அதிகம் நடமாடுகிறார்கள் என்று தெரிகிறது இந்திரா சௌந்தர் ராஜன் வகை எழுத்தாளர்களை தவிர வேறு சித்தர்களைப் பற்றி சற்று நிதானமாய் ஆராய்ந்து இருக்கிறார்களா என்று ஏமாற்றமே மிஞ்சியது கிடைத்தவை எல்லாம் பெரும்பாலும் மயிர்க் கூச்செறிய வைக்கும் அதிமானுடக் கதைகள் கபில் ச்வெலேபில் என்பவர் நல்ல புத்தகம் எழுதியிருக்கிறார் என்றார்கள் கிடைக்கவில்லை மீ ப சோமு மூன்று பாகங்களாக எழுதி அண்ணாமலைப் பல்கலை வெளியிட்ட இந்த புத்தகம் சற்று 'உணர்ச்சி வசப் படாமல்' சித்தர்களைப் பற்றி ஆராய்கிறது மீ ப சோமு சில சரித்திர நாவல்களை கல்கியில் எழுதி இருக்கிறார் படித்த ஞாபகம் சில மூத்தக் குடிமக்களுக்கு இருக்கலாம் ஆனால் இந்த புத்தகம் ஒரு 'சரித்திர நாவல் ' அல்ல!
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சித்தர்கள் பற்றிய தேடல் ஒரு ஆழ்ந்த ஆன்மீகப்பயணம்.அது விவாதங்களுக்குரியதல்ல,தீவிரத்தை பொறுத்து பிடிகள் கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
Post a Comment