Sunday, June 6, 2010

ரஸ்புடினும் நித்தியானந்தாவும் 1

சமீபத்தில் நடந்த நீயா நானா நிகழ்வில் நித்தியானந்தா பற்றிய  பழைய நிலைப்பாட்டுக்கு சாருவை மன்னிப்பு கேட்க வைக்க எல்லோரும் ரவுண்டு கட்டி அடித்துக் கொண்டிருந்ததில் அவர் ரஸ்புடின்,ஹீலிங் என்று தீனமாக முனகிக் கொண்டிருந்ததை யாரும் கவனித்தார்களா தெரியவில்லை .யார் இந்த ரஸ்புடின்?சாரு ஏன் அவரை இந்த விவாதத்திற்குள் கொண்டு வந்தார்?

கிரகோரி ரஸ்புடின் தோராயமாக 1860 களில் ரஷ்யாவில் சைபீரியா பகுதியில் பிறந்த துறவி [இந்த பகுதியில் இருந்துதான் ஓஷோவின் குரு குர்ட்ஜீபும் வந்தார்]ஒரு அண்ணன்.ஒரு தங்கை.அவளுக்கு வலிப்பு நோய் உண்டு.[இது ஒரு முக்கியமான விவரம்.மிஸ்டிக் என்று அழைக்கப் படும் அதீத உணர்வாளர்கள் பலருக்கு அல்லது அவர்கள் பரம்பரையில் பலருக்கு நரம்புச் சிக்கல்கள் இருந்திருக்கிறன]அவள் குளத்தில் மூழ்கி இறந்தாள்.சில நாட்கள் கழித்து ரஸ்புடின் தனது அண்ணனுடன் குளிக்க செல்கையில் அதே போன்று மூழ்கி காப்பாற்றப் பட்டாலும் அண்ணனின் நுரையீரலில் நீர் புகுந்து நிமோனியாவில் இறந்தான்.இந்த இரண்டு மரணங்களும் ரச்புடினை மிகவும் பாதித்தன.[இதுவும் ஒரு முக்கியமான கணணியே.இந்த அதீத உணர்வாளர்கள் பலருக்கு மரணம் தான் ஒரு திருப்பு முனையாக ,அவர்களை அக உலகு நோக்கி திருப்பும் விசையாக இருந்திருக்கிறது.பிரபல உதாரணம் புத்தர்.தான் தற்செயலாக வீசிய கயிற்றில் அடிபட்டு குருவி இறந்ததைப் பார்த்ததும் அதிர்ந்துதான் விசிறி சாமியார் ஞானம் தேடிப் புறப்பட்டதாக கேள்வி] பின்னால் அவரது குழந்தைகள் இருவருக்கு தனது சகோதரர்கள் பேரையே வைத்தார்.

சிறு வயதிலேயே ரஸ்புடின் காட்சிகள் காண ஆரம்பித்து விட்டார்.ஒரு திருட்டுக்கான தண்டனையாக  மூன்று மாதங்கள் ஒரு மடத்தில் தங்கி இருக்கையில் மேரி மாதாவின் காட்சியும் கிடைத்தது.அதன் பிறகு பதினெட்டு வயதில்  நமது தாந்திரீகம் போன்ற ஒன்றை கடைப் பிடிக்கும் ஒரு நாஸ்டிக் கிறித்துவ அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது.பிற கிறித்துவ அமைப்புகளைப் போல நாஸ்டிக் குழுக்கள் காமத்தை வெறுக்கவில்லை.மாறாக காமமும்  அவர்களின் வழிபாட்டு முறைகளில் ஒன்று .இந்த அணுகு முறையுடன் அவர் மகாரி என்ற தனது குருவைச் சந்தித்தார் .அதன் பிறகு கல்யாணம்.மூன்று குழந்தைகள் .திருமணத்திற்கு புறம்பாக இன்னொரு குழந்தையும் உண்டு!அதன்பிறகு கொஞ்ச நாள் ஜெருசலேம் கிரீஸ் என்று தலபிரயாணம்  எல்லாம் போனார்.பிறகு பீட்டர்ஸ்பர்க் வந்தார்.இப்போது அவர் முழு மிஸ்டிக்காய் மாறி இருந்தார்.

ஆறரை அடி உயரம்.கட்டுமஸ்தான உடல்.தோள்வரை தொங்கும் முடி.அடர்ந்த புருவங்கள்.மிக மிக கூரிய பார்வை.தலை நகர வாசிகள் அவரை பைத்தியக் கார துறவி
என்று அழைத்தாலும் அவர் மேல் ஒரு அச்சம் கலந்த மரியாதை இருந்தது.காரணம் அவனது தோற்றம் மட்டும் அல்ல.நோய்களைக் குணப் படுத்தும் அவனது அரிய ஆற்றல் .

கொஞ்சம் கொஞ்சமாக அவனது புகழ் அரண்மனை வரை பரவியது.காரணம் ஜார் மன்னனின் மகனுக்கு இருந்த ரத்தக் கசிவு நோய்.இளவரசனுக்கு லேசாக உராய்ந்தால் கூட ரத்தம் நிற்காமல் பெருகி எமலோகம் வரை எட்டிப் பார்க்காமல் போகாது. அந்தக் காலத்தில் இதற்கு மருந்து இல்லை.இதேபோல் ஒரு கையறு தருணத்தில் அரண்மனைக்கு அழைக்கப் பட்டான் ரஸ்புடின்.இளவரசனை காப்பாற்றினான்!அன்றில் இருந்து ரஷ்ய அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஆனான் ரஸ்புடின்.ராணிக்கு மிக நெருக்கம் ஆனான்.ஒவ்வொரு அரசியல் முடிவிலும் அவன் பங்கு இருந்தது.விளைவு எதிரிகள்.ஒரு கட்டத்தில் அவனைப் போட்டுத் தள்ளிவிட முடிவு செய்தார்கள்.விருந்துக்கு அழைத்து கேக்கில் சயனைட் கலந்து கொடுத்தார்கள்.அவன் அதை சாப்பிட்டுவிட்டு கல் மாதிரி இருந்தான்.துப்பாக்கியால் சுட்டார்கள்.பயன் இல்லை.அவனைக் கத்தியால் குத்தி சாக்குப் பையில் கைகளைக் கட்டி அடைத்து நதியில் தூக்கி எறிந்தார்கள்.மறுநாள் அவனது பிணம் நதிக் கரையில் கிடைத்தது.ஆனால் அவன் சாக்குப் பையில் இருந்து எப்படியோ வெளிவந்திருந்தான்!


ரஸ்புடினது இன்னொரு பக்கம் தான் சுவையானது.ரஸ்புடின் ஒரு பக்கம் ஆன்மீகவாதி.தனது பிரார்த்தனைகள் மூலம் தீராத நோய்களைக் குணப் படுததிகிறவன்.மறுபக்கம் பெரிய குடிகாரன்.ஸ்திரீ லோலன்.அவனுக்கு மிகப் பெரிய ஆண்குறி இருந்தது என்று அவன் மகளே எழுதி வைத்திருக்கிறாள்..[அவனைக் கொலை செய்தவர்கள் அவன் உறுப்பை மட்டும் தனியாக வெட்டி வைத்துக் கொண்டார்கள்!அது மிகப் பெரிய விலைக்கு  போனது என்று வேறு சொல்கிறார்கள்!]அவனுடன் உறவு கொள்ளும் பெண்கள் உச்ச்சகட்டத்தில் மயங்கி விழும் அளவுக்கு மன்மதக் கலையில் நிபுணன்.இப்படிப் பட்ட  ஒரு அ -ஒழுக்க நபருக்கு எப்படி இந்த ஆற்றல்கள் அல்லது சித்திகள் எல்லாம் வாயத்தது?நாம் பல காலமாக  துறவு பற்றியும் ஆன்மிகம் பற்றியும் ஒழுக்கம் பற்றியும் வைத்திருக்கும் கருதுகோள்கள் ஏன் ரச்புடினுக்கு பொருந்தவில்லை?நித்தி தான் செய்து கொண்டிருந்ததாக சொன்ன 'ஆராய்ச்சி' என்ன என்பதைப் பற்றி எல்லாம் அடுத்த பகுதியில் பேசலாம்.

2 comments:

Anonymous said...

ம்ம்.....அப்புறம்........சொல்லுங்க

அப்பாதுரை said...

ரஸ்புடின் தன் உடலின் அத்தனை பாகங்களையும் காமலீலைகளில் உபயோகித்தான் என்று சொல்லப்படுகிறது. ரசியாவின் ஜார் குலப் பெண்மணிகளுக்கு வைப்ரேடர், ரப்பர் ஆணுறுப்பு போன்றவற்றைத் தயாரித்துக் கொடுத்தானாம். ரஸ்புடின் வைப்ரேடர், உண்மையாக இருக்கும் பொருட்டில், சுவாரசியமானது. பலூனுக்குள் (பட்டிலோ எதிலோ செய்த காற்றடைத்த கத்தரிக்காய் என்று வையுங்களேன்) வண்டுகளை அடைத்து வைப்பானாம். கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது.

நித்தி கொஞ்சம் தத்தி போலத் தோன்றுகிறதே?

LinkWithin

Related Posts with Thumbnails